• Mon. Mar 24th, 2025

அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்த தமிழக அரசு குழு அமைப்பு

ByT. Vinoth Narayanan

Feb 23, 2025

தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்து ஆணையிட்டுள்ளார்.
இந்தக் குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நாளை 24.2.25 தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதனை செய்தி மக்கள் தொடர்புத்துறை, இயக்குநர் வெளியிட்டுள்ளார்.