• Mon. Mar 17th, 2025

தியாகராஜர் பாகவர் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மரியாதை: இ.பி.எஸ். அறிவிப்பு

சென்னை : மறைந்த நடிகரும் பழம்பெரும் பாடகருான எம்.கே.தியாகராய பாகவதரின 116 வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்படும் என்று அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருச்சியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் மார்ச் 1ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் நி்கழச்சியில் பாகவதரின் சிலைக்கு கழக அமைப்புச் செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களுமான கேடி.ராஜேந்திரபாலாஜி , எஸ்.வளர்மதி மற்றும் சிவபதி, அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், ஆர்.மனோகரன் திருச்சி புற நகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, புறநகர் மாவட்ட செயலாளர் ப.குமார், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சினிவாசன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

‘ஏழிசை மன்னர்’ எம்.கே. தியாகராஜ பாகவதர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.