

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் மதியம் 12 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14-ம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. 2025-26 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். இதில் வேலைவாய்ப்பு, கல்விக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மார்ச் 15-ம் தேதி வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பணிகள் நடந்து வந்தன. அதனை இறுதி செய்யும் பணியை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் மதியம் 12 மணியளவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர் இதில் 2025-26-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

