
பிரிட்டன் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியரான ரிஷிசுனக்க்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
பிரிட்டன் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷிசுனக்,லிஸிட்ரஸ் இருவரும் உள்ளனர். சமீபத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் லிஸிட்ரஸ்ஸூக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று லிஸி,ரிஷி சுனக் இடையே டிவி சேனிலில் நேருக்குநேர் அனல் பறக்கும் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின் இறுதியில் பார்வையாளர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரிஷிசுனக் க்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
