• Fri. Dec 13th, 2024

செஸ் ஒலிம்பியாட் போட்டி மு.க.ஸ்டாலின் ஆய்வு

ByA.Tamilselvan

Jul 27, 2022

நாளை துவங்க உள்ள செஸ்ஒலிம்பியாட் போட்டிதுவக்க விழா ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு பிரமாண்டமாக நடைபெறுகிறது. விழாவை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன. இதையொட்டி தொடக்க விழா ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். நேரு ஸ்டேடியத்தில் மேடையில் ஆங்காங்கே செஸ் காய்கள் இருக்கும்படி அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளதையும் அவர் பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர் .