• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

45 நாட்களாக மழை வெயிலில் நாசமாகும் நெல் மூடைகள்..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதி யில் போடிநாயக்கன்பட்டியில் ரயில் வே நிலையம் அருகில் நேரடி நெல் கொள் முதல் நிலையம் உள்ளது.

இந்த நெல் கொள்முதல் நிலையத் தில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் நெல்லை கொண்டு வந்து மலை போல் குவித்து வைத்துள்ளனர். மேலும் நெல் கொள்முதல் செய்யப் பட்ட மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுஉள்ளது.இந்நிலையில் தற்போது கொள்முதல் செய்யப்பட்ட நெல் முடைகளை எடுத்துச் செல்ல லாரி வராததால்குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்லினை எடை போடசாக்கு பற்றாக்குறை ஏற்படுவதால் அளவீட்டுகொள்முதல் செய்யாமல் கொள்முதல் மையத்திலேயே தேங்கி நிற்கும் அவல நிலை உருவாகியுள்ளது.

இதனால் சாக்குடன் கட்டி வைக்கப்பட்டுள்ள நெல்முடை களும்,கொள்முதலுக்காக குவித்துவைக்கப்பட்டுள்ள நெல் குவியல்களும்மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து வருவதால்சில முறைகள் மழையில் முளைக்கத் துவங்கிவிட்டது. மேலும் சில முறைகள் கரையான்கள் அரித்து சாக்குகள் இற்று போய்ஓட்டை விழுந்து நெல்லெல்லாம் கீழே சிதறும் நிலை உருவாகிவிட்டது. இதனால் விவசாயிகள் வேதனையுடன் கண்ணீர் வடிக்கிறார்கள்.

இது பற்றி தகவல் அறிந்த முன்னாள் எம்.எல்.ஏ.,வும் தற்போது சோழவந்தான் தொகுதிஅ.தி.மு.க. வேட்பாளருமான மாணிக்கம் நேரடியாக வந்துநெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின் 45 நாட்களாக சுமார் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட மூடைகள் களத்தில் இருப்பதாகவும் அதில் பல மூடைகளில் கரையான் அரித்த நெல்,மழையில் முளைத்தநெல்லினை பார்த்து வேதனை அடைந்தார். பின் நெல் கொள்முதல் நிலைய பொறுப்பாளரிடம்விவரங்களை கேட்டறிந்து மழையிலிருந்து நெல்மூடையினை பாதுகாக்கஅரசு கிடங்கிகளுக்கு விரைந்து எடுத்துச் செல்லமாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

உடன் ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் ராஜேஷ் கண்ணா பேரூர் செயலாளர்் அசோக்குமார்கட்சி நிர்வாகிகள் தனசேகரன், முத்து கண்ணன், செந்தில்குமார்,வில்லி ஆகியோர் வந்திருந்தனர்.