கழுகு சீரிஸ் படங்களை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் ‘காமன் மேன்’ என்ற படத்தி படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக ஹரிப்பிரியா நடித்து வருகிறார். நடிகர் விக்ராந்தும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் மதுசூதனன், துளசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தை சசிகுமாரின் ராஜவம்சம் படத்தை தயாரித்த செந்தூர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகும் இப்படத்திற்கு ராஜா பட்டாசார்ஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
சஸ்பென்ஸ் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்தப் படத்தின் தலைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டர்வர்களுக்கு, ‘கோடியில் ஒருவன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சசிகுமார், ஹரிப்ரியா நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைத்துள்ள ‘காமன் மேன்’ படத்தை செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில்ஐ டி.டி.ராஜா மற்றும் டி.ஆர்.சஞ்சய் குமார் தயாரிக்கின்றனர். ‘காமன் மேன்’ என்ற தலைப்பில் உள்ள சர்ச்சைகளின் காரணமாக நான் மிருகமாய் மாற என்று எங்கள் தலைப்பு மாற்றப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.