• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

நாடாளுமன்றத்தில் 3வது நாளாக தொடரும் போராட்டம்.. எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்…

Byமதி

Dec 17, 2021

லகிம்பூர் கெரி விவசாயிகள் படுகொலை வழக்கில் தொடர்புடைய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றாவது நாளாக எதிர்கட்சிகள் நடத்திய குச்சல் குழப்பம் காரணமாக இன்றும் ஒத்திவைக்க எதிர்க் கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், ராஜ்ய சபா கூட்டத்தின்போது அமைதி நிலவ வரும் திங்கள் வரை அவையை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் வாசலில் காந்திசிலை முன்னர் கோஷங்களை எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடும் அமளியில் ஈடுபட்ட 12 ராஜ்யசபா எம்.பி.,கள் வரும் நாட்களில் கூட்டங்களில் கலந்து கொள்ள வெங்கையாநாயுடு தடை விதித்துள்ளார்.
அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷி மீதான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மகன் செய்த குற்றத்திற்காக தந்தைக்கு தண்டனை அளிக்க முடியாது என்று மத்திய பாஜ., அரசு கூறிவருகிறது.

இதுகுறித்து முன்னதாக காங்கிரஸ் எம்பி., ராகுல் கூறுகையில் அஜய் மிஸ்ரா பதவி விலகும்வரை எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.