

கடந்து ஆண்டுகளில் கடன் ஆப்கள் குறைந்த வட்டியில் உடனடியாக கடன் தருவதாகக் கூறி தனிப்பட்ட நபரின் ஆதார், பான் எண் மற்றும் மின்னஞ்சல் விவரங்களைப் பெற்றுக் கொண்டு வாடிக்கையாளர்களின் தொலைபேசி உள்ள விவரங்களை சட்ட விரதமாக பதிவிறக்கம் செய்கின்றனர். இதனால் பல பேர் தற்கொலை வரை செல்கின்றனர்…
இது குறித்து ரிசர்வ் வங்கி ஏற்கனவே எச்சரித்தும் உள்ளது. அதன் மறுபக்கம் நிஜமாகவே உடனடியாக கடன் வழங்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. இதில் யார் மோசடி கும்பல் என கண்டறிவது சாதாரண மக்களுக்கு கடினமானது. எனவே உடனடிக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும் போது சில விஷயங்களை கடைபிடிக்கும்படி எஸ்பிஐ வங்கி அறிவுறுத்தி உள்ளது. அதாவது,
*இன்ஸ்டண்ட் கடன் வழங்கும் ஆப் டவுன்லோடு செய்வதற்கு முன் அதன் நம்பகத்தன்மையை கண்டறியவேண்டும்.
*சந்தேகத்திற்குரிய இணைப்புகளை (Links) கிளிக் செய்யக்கூடாது.
*உங்கள் தகவல்களை திருடக்கூடிய, அங்கீகாரம் இல்லாத ஆப்களை தவிர்க்கவும்.
*சந்தேகத்திற்குரிய கடன் ஆப்கள் குறித்து காவல்துறைக்கு புகார் தெரிவிக்கவும்.
*உங்கள் தகவல்களை பாதுகாப்பதற்கு ஆப்களின் permission settingsஐ சரிபார்க்கவும்.
இதை செய்து சற்று எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது..
