தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகிய சந்தானம் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது இவர் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் “குலு குலு” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தில் சந்தனத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மேலும் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் உள்ளிட்ட பலர் நடத்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்து சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். சர்க்கிள் பாக்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிப்பாளர் எஸ். ராஜ் நாராயணன் தயாரித்திருக்கிறார். இப்படம் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் “குலு குலு” படத்தில் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.