• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம்..,

வேடசந்தூரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகள் 4-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தெரிவிக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் சென்றனர்.

இன்று மாலை வேடசந்தூரில் ஆர்.எச்.காலனியில் இருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையில் நடந்த பொலீசார் அணிவகுப்பு ஊர்வலத்தில் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பவித்ரா மற்றும் வேடசந்தூர், கூம்பூர் மற்றும் ஆயுதப்படை போலீசார் சூறாவளி காற்றிலும், கொட்டும் மழையிலும் தொடங்கிய ஊர்வலம் வடமதுரை சாலை, சாலைதெரு, கடைவீதி, பஸ் நிலையம், குடகனாறு பாலம் வழியாக ஆத்துமேடு வந்து நிறைவு பெற்றது.