
மதுரை மாநகராட்சியை கண்டித்து பாஜக 86 வது வார்டு உறுப்பினர் நூதனமுறையில் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம்.
மதுரை மாநகராட்சி மாவட்ட கூட்டம் இன்று மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டு மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 100 வார்டு மாவட்ட உறுப்பினர்களின்,பாஜக மாமன்ற உறுப்பினர் பூமா தன்னுடைய 86 வார்டை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர்,மாநகராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருவதாக கூறி மாநகராட்சி அலுவலகம் முன்பு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
மேலும்,குடிநீர் சாக்கடை கலந்து வருவதாகவும் பலமுறை மாநகராட்சி மேயரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தன் உடையில் தையல் போட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.அதற்கு விளக்கம் கேட்டதற்கு தான் உடலில் உள்ள ஆடையில் எப்படி தையல் போட்டு உள்ளதோ அதே மாதிரி மாநகராட்சி வேலைகளும் (தையல் போட்டு,) ஓட்டு போட்டு வேலை நடப்பதாக, தெரிவித்தார்.
