கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை தோறும் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வரும் நிலையில் இன்று மனு அளிப்பதற்காக காலை முதலே ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடினர்.
நேரம் செல்லச்செல்ல ஏராளமானோர் மனு அளிக்க கூடிய நிலையில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பெரும் கூட்டமாக கூடி நின்றதோடு முகக் கவசம் அணியாமல் நின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தப்பட்ட மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் நிறுத்தப்பட்ட நிலையில் அவர்கள் பொதுமக்களை கண்டுகொள்ளாததால் சமூக இடைவெளி மற்றும் அரசின் விதிமுறைகள் காற்றில் பறந்தன.