மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து அந்த இயக்கத்தின் நிர்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட விஜய் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து அந்த 9 மாவட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர். குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக நபர்கள் போட்டியிடுகின்றனர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், முடிச்சூர் பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அந்த இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மக்கள் கூடும் பல்வேறு இடங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
குறிப்பாக, விஜய் புகைப்படம் பதிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர். மேலும் விஜய் மன்றத்தை சேர்ந்தவர்கள் வெற்றியடைவோம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.