சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 15 அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று துவங்கின….
தமிழகம் முழுதும் அரசு கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று துவங்குகின்றன அதன்படி சேலம் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட சேலம் நாமக்கல் தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 15க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று துவங்கின.

சேலம் மரவனேரி பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இன்று காலை முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரிக்கு தங்களது பெற்றோருடன் வந்தனர் கல்லூரிக்கு வரும் மாணவ மாணவிகளின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த ஓராண்டுக்கு பிறகு கல்லூரிக்கு வருகை புரிந்த மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் வகுப்பறைக்குள் சென்றனர்