


தேனியில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு மற்றும் மாநில கல்வி உரிமைப் பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் தேனி சுந்தர் தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளர் நாகராஜ் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் தொடக்க உரையாற்றினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துக்குமார், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் செல்லத்துரை, முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பெத்தனக்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் தர்மர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், ஜனநாயக மாதர் சங்கத்தின் பொறுப்பாளர் வெண்மணி, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் வேல்பிரகாஷ், தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி ஆசிரியர் நலச் சங்கத்தின் மாநில தலைவர் குமார், எழுத்தாளர் சங்க மாவட்ட தலைவர் இதய நிலவன், உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க பொறுப்பாளர் செல்வ மங்கை, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொறுப்பாளர் ஜெகதீசன் உள்ளிட்டோர் பேசினர்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு சிறப்புரை ஆற்றினார். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர் கிருஷ்ணசாமி நிறைவுரை ஆற்றினார். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஏராளமான நண்பர்கள் கலந்து கொண்டனர். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் நன்றி கூறினார்.

மாநிலங்களின் தனித்துவ மொழி, பண்பாட்டு அடையாளங்களை அழித்தொழிக்கும் முயற்சியாக ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிரான தொடர் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது என கருத்தரங்க கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.

