• Tue. Apr 22nd, 2025

பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா தேனி எம்பி அனுப்பி வைத்தார்.

தான் படித்த பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவிகளை கல்வி சுற்றுலா அனுப்பி வைத்தார் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன்.

தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தங்க தமிழ்ச்செல்வன். இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன் பட்டியாகும். இங்குள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் தான் ஆரம்ப காலத்தில் தங்க தமிழ்ச்செல்வன் கல்வி பயின்று உள்ளார்.

இதற்கிடையே இப்பள்ளியானது இந்த ஆண்டு நூற்றாண்டு விழா கண்டது. இதனை அடுத்து இங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து இங்கு பயிலக்கூடிய பள்ளி மாணவ மாணவிகள் தனது சொந்த ஏற்பாட்டில் கல்வி சுற்றுலா செல்வதற்கு எம்பி தங்க தமிழ்ச்செல்வன் ஏற்பாடு செய்தார். இதை அடுத்து கேரள மாநிலத்தில் உள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு செல்லவும், முல்லைப் பெரியாறு அணையின் வரலாறுகள் மற்றும் அதன் மகத்துவம் அதைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் அவர்களின் வரலாறு உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கல்வி சுற்றுலா நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனியம்மாள் மற்றும் 60க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்டோ பங்கேற்றனர்.

தொடர்ந்து மாணவ மாணவிகளை கல்விச் சுற்றுலா வழி அனுப்பி வைத்த எம்பி தங்க தமிழ்ச்செல்வன், மாணவ மாணவிகளிடம் கூறுகையில் கல்வி சுற்றுலாவில், தாங்கள் செல்ல இருக்கும் இடம் தென் மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணையின் ஒரு பகுதியாகும் நாம் குடிக்கின்ற தண்ணீர் அங்கிருந்துதான் வருகிறது. அந்தத் தண்ணீரின் பயன்பாடுகள், அதன் வரலாறு, அந்த அணையை கட்டியவர், அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் குறித்தும் அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் கல்வி சுற்றுலா முடித்துவிட்டு வந்து அனைவரும் முல்லை பெரியாறு அணை குறித்து கட்டுரைகள் எழுதி கொடுக்க வேண்டும் என்றும் மாணவர்களிடம் அவர் கூறினார்.