• Fri. Apr 26th, 2024

வீடுகளை தேடி வரும் மக்கள் பள்ளி திட்டம்!..

Byமதி

Oct 1, 2021

தமிழகத்தில் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கற்பிக்கும் மக்கள் பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்பட்டாலும்  அவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.  அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு நடப்பு கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, 1 முதல் 8ம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக தினமும் 1 மணி முதல் 1 மணி 30 நிமிடம் வரையில் தன்னார்வலர்களைக் கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் மக்கள் பள்ளி என்கிறத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *