• Wed. Dec 11th, 2024

சரண்ஜித் சிங் பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்வு

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியின் மூத்த தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், முதல்வர் அமரீந்தர் சிங் நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக காங்கிரஸ் தலைமை ஆலோசனை மேற்கொண்டது.

இதற்காக கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மதியம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஸ் ராவத் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்