• Tue. Jun 16th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

ஒட்டன்சத்திரத்தில் பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்..,

ஒட்டன்சத்திரத்தில் உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கான இலவச சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு நோய் கண்டுபிடிப்பு மற்றும் ஆலோசனை மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி செயற்குழு உறுப்பினர் ஹெரால்டு ஜாக்சன் தலைமை ஏற்று பேசினார்., ஆயுட்கால உறுப்பினர் வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம் அண்ணா சுமை தூக்குவோர் சங்கத் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒட்டன்சத்திரம் வட்ட அரசு மருத்துவமனை முன்னாள் தலைமை மருத்துவர் டாக்டர் ஆசைத்தம்பி கலந்துகொண்டு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினார்.

இந்த முகாமில் 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது.

முகாம் ஏற்பாடுகளை தி வாரியர் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.