இந்தியாவிலேயே கேரளா மாநிலத்தில்தான் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
நாட்டில் பதிவாகும் பதிப்பில் 80% கேரளாவில் தான் என்பது சற்றே கவலையை அளிக்கிறது.
இன்று மேலும் புதிதாக 19,653 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை
தற்போது வரை 1,73,631 பேர்.
இன்று 26,711 பேர் டிஸ்சார்ஜ் ஆக, இதுவரை 43,10,674 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுமட்டுமின்றி இன்று மட்டும் 152 பேர் உயிரிழக்க, இதுவரை 23,591 பேர் கேரளாவில் மட்டும் பலியாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,13,295 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பாசிட்டிவ் சதவீதம் 17.34 ஆகும்.
கேரளா அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் கொரோனாவை கட்டுப்பாடுத்த போராடி வருகிறது.