• Tue. Jun 16th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

வத்தலகுண்டு அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழா..,

ByPuthar Pandian P

May 8, 2026

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஒன்றியம் ஜி.தும்மலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாலம்மன் கோவில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது

பல்வேறு நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இத்திருவிழாவில் இறுதி நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்

கால்நடைகள் வளம் பெற வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் கிராமப் பகுதி முழுவதும் பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

இத்திருவிழாவில் சுற்றியுள்ள வத்தலகுண்டு, பழைய வத்தலகுண்டு, கெங்குவார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.