

தேவையான பொருட்கள்
கருப்பு மிளகு – 2 டீஸ்பூன், கிராம்பு – 2 டீஸ்பூன், கருப்பு ஏலக்காய் – 4, இலவங்கப்பட்டை – 5 கிராம், ஜாதிக்காய் – 1ஃ2 துண்டு, பெருஞ்சீரகம்(சோம்பு) – 1 டீஸ்பூன், அதிமதுரம் – 1 டீஸ்பூன், துளசி இலைகள் – 2 டீஸ்பூன், துளசி விதைகள் – 1 டீஸ்பூன், சுக்குப்பொடி- 3 டீஸ்பூன்
செய்முறை:
அனைத்து உலர்ந்த பொருட்களையும், ஒரு வாணலியில் சேர்த்து நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும். வறுத்த பொருட்கள் அனைத்தையும் தனியாக வைத்து நன்கு ஆற வைக்கவும். நன்கு உலர்ந்த பொருட்கள் அனைத்தும், ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்து மைய அரைத்து உலர்ந்த மற்றும் சுத்தமான ஜாடியில் போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த மசாலா டீ பவுடர் சுமார் 4 முதல் 6 மாதங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். ஒரு பாத்திரத்தில், இரண்டரை கப் அளவிற்கு தண்ணீர் மற்றும் 2 கப் அளவிற்கு பால் ஆகிய இரண்டையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அத்துடன் சுவைகேற்ப சர்க்கரையை சேர்க்கவும். இதை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வந்து, அதனுடன் 2 டீஸ்பூன் தேயிலை இலைகள் மற்றும் 1 டீஸ்பூன் மசாலா டீ பவுடரை சேர்க்கவும். சுமார் 4-5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான மசாலா டீ தயார். இந்த டீ உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, புத்துணர்ச்சியையும் வழங்கக்கூடியது.
