தேவையான பொருட்கள்:
குளிர்ந்த பால் – 1 கிளாஸ், ஃபலுடா விதைகள் – 1-2 டீஸ்பூன், சர்க்கரை – சுவைக்கு ஏற்ப
30 நிமிடங்களுக்கு முன் ஊற வைக்கப்பட்ட1 டீஸ்பூன் சப்ஜா அல்லது துளசி விதைகள், ரோஸ் சிரப் – 1-2 டீஸ்பூன், வெண்ணிலா ஐஸ்கிரீம் – 2 டீஸ்பூன், நறுக்கிய உலர் பழங்கள்
செய்முறை:
முதலில் பாக்கெட்டில் உள்ள அறிவுறுத்தல்களின் படி ஃபலூடா விதைகளை வேக வைத்து தயார் செய்யவும். வேக வைக்கப்பட்ட விதைகளை தனியே எடுத்து வைத்து குளிர விடவும். ஒரு கிளாஸை எடுத்து அதில் ரோஸ் சிரப்பை சேர்த்து கொள்ள வேண்டும். பின் அந்த கிளாஸில் பால் ஊற்றி ஆற வைத்த சப்ஜா விதைகளை சேர்க்கவும். சர்க்கரை மற்றும் ஃபலூடா விதைகளை சேர்த்து நன்கு கிளறவும். இப்போது அதில் வெண்ணிலா ஐஸ்கிரீமை சேர்த்து உலர் பழங்களால் அலங்கரிக்கவும். இதன் மேலே சிறிது ரோஸ் சிரப்பை தூவ கூட செய்யலாம்
ரோஸ் சிரப் ஃபலுடா:
