தேவையானவை:
பக்கோடா – ஒரு கப், வெங்காயம், தக்காளி – தலா 1, புளி – நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் – காரத்துக்கேற்ப, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, சோம்பு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு,
செய்முறை:
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சோம்பு போட்டு தாளித்து… நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் புளியைக் கரைத்து ஊற்றி… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். குழம்பு கெட்டியாக இருக்கக் கூடாது. பச்சை வாசனை போனதும் பக்கோடாவை குழம்பில் போட்டு, சிறிது நேரம் கொதிக்க வைத்து, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.