• Fri. Jun 2nd, 2023

சுவையான முட்டை குழம்பு:

Byவிஷா

Feb 28, 2022

தேவையான பொருள்கள்

வேகவைத்த முட்டை – 4, வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சோம்பு – 1 டீஸ்பூன், பட்டை – 2, கிராம்பு – 2, ஏலக்காய் – 2, பிரியாணி இலை – 1, தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது), தேங்காய் (துருவியது) – 1 கப், கொத்தமல்லி தழை – சிறிதளவு, குழம்பு மிளகாய் தூள் – அரை டேபிள் ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், தனி மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
செய்முறை:
முதலில் தேங்காய் மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு எண்ணெய், பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் பிரியாணி இலை சேர்க்கவும். பின்பு, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பின்னர், பொடியாக நறுக்கிவைத்துள்ள தக்காளியும் சேர்த்து நன்கு கிளறி, ஒரு மூடியினால் மூடி சிறிது நேரம் வேக விடவும். பின்பு, அரைத்துவைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். வேற ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு எண்ணெய், மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள் சேர்த்து வேக வைத்த முட்டைகளை குறுக்கே வெட்டி அதனுடன் சேர்த்துக்கொள்ளவும். வறுத்த இந்த வேகவைத்த முட்டைகளை, இப்பொழுது குழம்பினில் சேர்க்கவும். வேறு ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு எண்ணெய் மற்றும் சோம்பு சேர்த்து நன்கு தாளிக்கவும். தாளித்த சோம்பை, குழம்புடன் சேர்த்தால் சுவையான, மணமான முட்டை குழம்பு ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *