• Mon. Mar 27th, 2023

சமையல் குறிப்பு

Byகாயத்ரி

Jul 25, 2022

சைவ முட்டைக் குழம்பு

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு – அரை கப், தேங்காய்ப்பால் – அரை கப்,உப்பு – தேவையான அளவு, சீரகம் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – ஒருடீஸ்பூன்.குழம்புக்கு: பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, புளி – எலுமிச்சை அளவு, மிளகாய் தூள் -இரண்டரை டீஸ்பூன், தனியாதூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு -தேவையான அளவு, பூண்டு – 6 பல், கறிவாப்பிலை, மல்லித்தழை – சிறிது.அரைக்க: முந்திரி – 6, தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன். தாளிக்க: பட்டை- ஒரு துண்டு, சோம்பு – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன்,கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய் – கால் கப்.

செய்முறை:

தேங்காய்ப்பாலை சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, அது கொதி வரும்பொழுதுஇறக்கி அரிசி மாவுடன் சேர்த்து, அத்துடன் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறுங்கள்.தண்ணீர் போதவில்லை எனில், மேலும் சிறிது தண்ணீரை கொதிக்க வைத்து ஊற்றி, சிறுசிறுஉருண்டைகளாக உருட்டுங்கள். பூண்டு, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். புளியைஇரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைஒன்றாக அரைத்தெடுங்கள்.எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, பூண்டு, வெங்காயத்தையும் சேர்த்துவதக்குங்கள். நன்கு வதங்கியதும், தக்காளி, மிளகாய்தூள், உப்பு சேர்த்து வதக்கி, பச்சை வாசனைபோன பிறகு, புளிக்கரைசலை ஊற்றுங்கள். கரைசல் கொதிக்க ஆரம்பிக்கும்போது, உருட்டிவைத்திருக்கும் அரிசி மாவு உருண்டைகளைப் போட்டு நன்கு கொதிக்கவிடுங்கள்.உருண்டைகள் வெந்து பச்சை வாசனை போன பிறகு, அரைத்த முந்திரி விழுதை அதில் சேருங்கள்.2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். இந்தக் குழம்பில் இருக்கும் சைவ முட்டைகளை குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.சமைத்து, சுவைத்து பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *