ஆடிக்கொழுக்கட்டை:
தேவையான பொருட்கள்:
வெல்லம்ஃசர்க்கரை – 3ஃ4 கப் தேங்காய் – 1 கப் (துருவியது) அரிசி மாவு – 1 1ஃ2 கப் ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன் சுக்குப் பொடி – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லத்தை எடுத்துக் கொண்டு, அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து கையால் பிசைய வேண்டும். அப்படி பிசையும் போது, அது நீர் விட்டு வரும் போது, அதில் சுக்கு பொடி, ஏலக்காய் பவுடரை சேர்த்து கிளறி விட வேண்டும். அதன் பின் அரிசி மாவை சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.
பின் பிசைந்த மாவை சிறு உருண்டைகளாகஃகொழுக்கட்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் உருட்டிய உருண்டைகளை போட்டு 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். கொழுக்கட்டையின் மேல் தேங்காய் தெரிய ஆரம்பித்தால், நீரில் இருந்து கொழுக்கட்டைகளை எடுத்து விடுங்கள். இப்போது சுவையான ஆடி கொழுக்கட்டை தயார்.