• Thu. Sep 28th, 2023

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Jul 30, 2022

தேவையான பொருட்கள்
சுத்தம் செய்த வாழைப்பூ – 1.5 கப், வேக வைத்த உருளைக் கிழங்கு – 2, வெங்காயம் – 1, சீரகம் – 1 ஸ்பூன் (ஒன்றிரண்டாக நசுக்கவும்), மிளகாய்த் தூள் – 1 அல்லது 1/2 ஸ்பூன், கரம் மசாலா பொடி – ½, மைதா – 2 ஸ்பூன், கொத்தமல்லி – தேவைக்கு ஏற்ப, உப்பு மற்றும் தண்ணீர் – தேவைக்கு ஏற்ப
வறுக்க தேவையான பொருட்கள்
சோள மாவு – 2 ஸ்பூன், தண்ணீர் – தேவைக்கு ஏற்ப, பிரெட் தூள் – பிரட்டி எடுப்பதற்கு ஏற்ப, எண்ணெய் – வறுக்க தேவையான அளவு

செய்முறை:

வாழைப்பூவை தண்ணீரில் போட்டு வேக வைக்க வேண்டும். வெந்ததும் அதை மிக்சியில் பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த உருளைக் கிழங்கை தோல் உறித்து அதை மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி உடைத்த சீரகம், சிறிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.     அடுத்ததாக வாழைப்பூ பேஸ்டை அதில் போடவும். வாழைப்பூ நீர் இறுகும் வரை பிரட்டவும். பின் மசித்த உருளைக் கிழங்கை சேர்த்துக் கொள்ளவும். பிறகு மிளகாய் பொடி, உப்பு மற்றும் கரம் மசாலா பொடி சேர்த்து நன்கு பிரட்டவும். அதிக நீர் இருப்பது போல் தெரிந்தால் கொஞ்சம் மைதா கலந்து கொள்ளுங்கள். அதோடு கொத்தமல்லி தழைகளை சேர்த்துக் கொள்ளவும். கலவையை நன்கு கலந்ததும் அதை தனியாக பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். வாழைப்பூ கலவையில் சூடு குறைந்ததும், கட்லெட் போல் தட்டிக் கொள்ளவும்.
பின் சோள மாவை கெட்டிப் பதத்திற்கு தண்ணீரில் கலந்து கொண்டு கட்லெட்டை அதில் முக்கி எடுத்து, பின்னர் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து எண்ணெயில் பதமாக பொறித்து எடுக்கவும். பொன்னிறமாக வரும் வரை பொறிக்கவும். உடையாமல் பார்த்துக் கொள்ளவும். வாழைப்பூ கட்லெட் ரெடி. கட்லெட் தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ்தான் பொருத்தமாக இருக்கும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *