

ஆடிக்கும்மாயம்:
தேவையான பொருட்கள்:
உளுந்தம்பருப்பு – 4 டம்ளர், பச்சரிசி – 4 டம்ளர், கருப்பட்டி (பனை வெல்லம்) – அரை கிலோ, தண்ணீர் – 6 டம்ளர், நெய் – சிறிதளவு.
செய்முறை:
கடாயில் உளுந்தம் பருப்பு, பச்சரிசி ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொண்டு மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். இந்த மாவினை சலித்து எடுத்துக்கொண்டு கடாயில் இட்டு வறுக்க வேண்டும். இன்னொரு அடுப்பில் கருப்பட்டியையும், தண்ணீரையும் சேர்த்து மிதமான சூட்டில் உருக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வறுத்தமாவுடன் நீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் கடாயில் கருப்பட்டி நீரை விட்டு, அதில் கும்மாயமாவை ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மாவு கெட்டியாகிப் பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது நெய்யை சேர்த்து கிளறி கொண்டே இருக்க வேண்டும் . பின்னர் அதனை இறக்கி தட்டில் கொட்டி ஆற விடவும். இப்போது ஆடி கும்மாயம் ரெடியாகிவிட்டது.
