
வடைகறி:
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – ஒரு கப், வெங்காயம் – 2, தக்காளி – 3, முதல் தேங்காய்ப் பால் – அரை கப், இரண்டாம் தேங்காய்ப் பால் – ஒரு கப், புதினா, கொத்தமல்லி – கைப்பிடியளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
மசாலா அரைக்க:
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 6 பல், சோம்பு – ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2.
செய்முறை:
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து கரகரப்பாக அரைக்கவும். மசாலா பொருட்களை ஒன்று சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். அரைத்த மசாலாவிலிருந்து கொஞ்சம் எடுத்து, அரைத்த பருப்புடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு பக்கோடாக்களாக போட்டுப் பொரித்தெடுக்கவும். இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை தாளித்து, வெங்காயம் சேர்க்கவும். அது வதங்கியதும், தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், அரைத்த மசாலா, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும், அதில் இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப் பாலை ஊற்றி கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவை கொதிக்கும்போது பொரித்தெடுத்த பக்கோடாக்களைப் போடவும். இரண்டு நிமிடம் கொதித்ததும், முதலாவதாக எடுத்த தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். செமயாக இருக்கும் வடைகறி.
