பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆப்ரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும், கொரோனா ஊக்கத்தொகையான 15ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும் , கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
