நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி திருமணம் முடிந்த கையோடு கோயில் கோயிலாக சென்று வழிபட்டுவந்தனர். இந்நிலையில் இருவரும் தேனிலவை கொண்டாட தாய்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். தாய்லாந்தில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..மேலும் தாய்லாந்திலிருந்து இருந்து திரும்பிய வந்த பிறகு இருவரும் சினிமாவில் பிசியாகிவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.