• Fri. Mar 29th, 2024

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரிந்த பணியாளர்கள் கலெக்டரிடம் மனு

ByA.Tamilselvan

Jun 20, 2022

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரிந்த பணியாளர்களுக்கு ஊதியம், சேமநலநிதி் ஆகியவற்றை ஒப்பந்த நிறுவனத்திடம் பெற்று தர கோரி பணியாளர்கள் ஆட்சியரிடம் மனு.
மதுரை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அலுவலகத்திற்கு உட்பட்ட 20 நகராட்சிகளில் செயல்பட்டு வரும் தூய்மை இந்தியா இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மதுரை பீ.பீ.குளம் பகுதியை சேர்ந்த ( Neat and dy Agency) தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் ஏராளமான மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் பணிபுரிந்துவந்துள்ளனர்.
இந்நிலையில் ஒப்பந்த நிறுவனமானது பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதிய தொகையை வழங்கவில்லை, 7 மாதத்திற்கு வழங்க வேண்டிய EPF மற்றும் சேமநலநிதி ஆகியவற்றை கணக்கில் செலுத்தவில்லை, மேலும் நிரப்பபடாத வவுச்சர்களில் கையெழுத்து பெற்றதாகவும் இது குறித்த முறையிட்ட பணியாளர்களை ஒப்பந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளதாகவும், எனவே பிடித்தம் செய்த EPP மற்றும் ESI தொகையினை உடனடியாக வழங்குமாறும், பணியாளர்களுக்கு பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய கோரியும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரிந்த மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகரை சந்தித்து மனு அளித்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :
கொரோனாகாலம் உள்ளிட்ட பல்வேறு சவால்களான காலகட்டத்தில் தூய்மை இந்திய திட்ட பணிகளை மேற்கொண்டோம் ஆனால் ஒப்பந்த நிறுவனமானது தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்கவில்லை, மேலும் தங்களுக்கான கோரிக்கையை முறையிட்ட நபர்களையும் ஒப்பந்த நிறுவனம் பணிநீக்கம் செய்துவிட்டனர்.
இது குறித்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் , வைப்புநிதி மண்டல அலுவலருக்கு புகார் அளித்த நிலையில் நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *