காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தனக்கு வழங்கப்பட்டபதவியை சில மணிநேரத்திலேயே ராஜினாமா செய்தது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக்குழுத் தலைவராக நியமிக்கப்பட் டார் குலாம்நபி ஆசாத் .ஆனால் அப்பதவியை அடுத்த சிலமணிநேரத்திலேயே ராஜினாமா செய்துள்ளார். மேலும் மாநில அரசியல் விவகார குழுவிலிருந்தும் அவர் விலகியுள்ளார். உடல்நிலை காரணமாக இந்த முடிவை எடுத்ததாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.ஆனால் தலைமை மீதான அதிருப்தி காரணமாக அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.