டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் குடியரசுதுணைத்தலைவர் ஜெகதீப் தங்கரை சந்தித்தார்.
தமிழகத்தின் பல்வேறு தேவைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றுள்ளார் முதல்வர்.அதன் பின்னர் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று உள்ள திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜெகதீப் தன்கரை முதல்வர் மு.க.ஸ்டாலின், சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
இந்நிலையில் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தங்கரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.தங்கரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பின் போது நாடாளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர் .பாலு.தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.