அதிமுகவில் தொடரும் உட்கட்சி பிரச்னைக்கு இடையில் அதிமுக பொதுக்குழு தீர்மான வரைவு குழு இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறது. 23-ம் தேதி கூடவுள்ள அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பை மீறி ஒற்றைத் தலைமைக்கான தனித் தீர்மானம் இன்றே இறுதி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என ஈ.பி.எஸ் ஆதரவு நிர்வாகிகள் கூறியுள்ள நிலையில், அதனை தள்ளி வைக்க வேண்டும் என ஓ.பி.எஸ். வலியுறுத்தியிருந்தார். மேலும் ஒற்றைத் தலைமை தனித் தீர்மானம் கொண்டு வரும் பட்சத்தில் பொதுக்குழுவை புறக்கணிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.