தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்தில் நீலகிரி ,கோவை,தேனி,திண்டுக்கல்,திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சென்னை யில்
அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.