
எடப்பாடி பழனிசாமி மீதான முறைகேடு வழக்கு விரைவில் துவங்கவுள்ளதாக ஆர்.எஸ் .பாரதி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் விசாரிக்கும் என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. “இது குறித்து பேசிய ஆர்.எஸ் .பாரதி தி.மு.க தொடரும் வழக்குகள் உண்மையானதாகவும்,நியாயமானதாகவும் இருக்கும் உச்ச நீதிமன்றத்தில் திமுகவின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.