நொடிப்பொழுதில் 2 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ரியல் ஹீரோவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் விபத்துக்கள் பெருமளவில் ஏற்படுகிறது. நாம் ஒழுங்காக வண்டி ஓட்டினாலும் அல்லது சாலையில் ஒழுங்காக நடந்து கொண்டு சென்றிருந்தாலும் எதிர்பாராத விதமாக விபத்துக்கள் நடந்து விடுகிறது. இதில் சிலர் பலத்த காயம் அல்லது ஒரு சிலர் இறந்து போய்விடுகிறார்கள். ஒரு சிலர் அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இல்லாமல் தப்பி விடுவார்கள். அந்தவகையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு சிசிடிவி கேமராவில் இரண்டு குழந்தைகள் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
அப்போது எதிர்பாராத விதமாக ஒரு வண்டி ஒன்று மின்னல் வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து குழந்தைகள் மீது மோத அருகில் வருகிறது. இதை பார்த்த ஒருவர் தன்னுடைய உயிரை கொடுத்து அந்த குழந்தைகளை நொடி பொழுதில் அங்கிருந்து காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் இதை பார்த்த இணையவாசிகள் அந்த இரண்டு குழந்தைகளின் உயிரை காப்பாற்றி அவருக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.