கர்நாடக மாநிலத்தின் பிரபல மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுருகா மடத்திற்கு சொந்தமான பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது மைசூர் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தததாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் கர்நாடகா காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் அலோக் குமார் தெரிவித்தார். இதனிடையே, மடாதிபதியை 14 நாள் நீதிமன்ற காவலில்வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்த மடத்தின் தலைமை மடாதிபதி மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்யக் கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமிகள் பாலியல் பலாத்காரம் .. மடாதிபதி அதிரடி கைது
