இபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில் ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் ஜீரோ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது. இபிஎஸ் மீண்டும் இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட உள்ளார். மேலும் ஓபிஎஸ் அவரது மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட உத்தரவு செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது.இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது…அரசியலில் ஓபிஎஸ் எதிர்காலம் இனி ஜீரோ தான். அதிமுகவிலிருந்து அவர் நீக்கபட்டது செல்லும் என்றார். மேலும் சட்டத்திற்கு புறம்பாக அதிமுக செயல்படாது என்று கூறிய அவர் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
