அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும் அவரே பொதுச்செயலாளராக தொடலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக எடப்பாடி அணி ஆதரவாளர்கள் கழக பொருளாளர் லோகநாதன், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பொன் முருகன் ,கூட்டுறவு சங்கத் தலைவர் வெள்ளை பாண்டியன் தலைமையில் எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதனை தொடர்ந்து பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர் பாலமுருகன், கூட்டுறவு சங்க தலைவர் மாரியப்பன், எஸ் எஸ் புரம் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம், மாவட்ட மாணவரணி முருகேசன், ஒன்றிய இளைஞரணி கண்ணன் மற்றும் நிர்வாகிகள் ஜெயராமன், இளமுருகன், வைகை பாலு மகளிர் அணி கொடியம்மாள் எம் எஸ் ஜி.சிவா ,அம்சலட்சுமி, செல்வம் ,அம்மா பேரவை செல்வராஜ் , துரை,ரங்கராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
