காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ரெயில்வேயில் வேலை தேடுவோருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘முன்பு, ரெயில்வேயில் வேலை பெறுவது கவுரவம். இன்றோ ரெயில்வேயில் வேலையே இல்லை. விரைவிலேயே ரெயில்வே முன்பு போல இருக்காது. ரெயில்வேயில் வேலை தேடுவோருக்கு அநீதியை நிறுத்திடுங்கள். அவர்களுக்கு நீதி வேண்டும்’ என பதிவு செய்ததுடன் we want #JusticeForRailwaysStudents என்ற ஹேஸ்டக்யையும் டிவிட் செய்துள்ளார்.