தென்ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் ஜப்பானிலும் கால் பதித்துள்ளது. அங்கு 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஜப்பானில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இயக்கம் கடந்த பிப்ரவரி மாத மத்தியில் தொடங்கி, தற்போது மொத்த மக்கள் தொகையில் 77 சதவீதம் பேர் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், 2 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஜப்பான் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டினர் வருகைக்கு ஜப்பான் தடை விதித்துள்ளது.
இதுமட்டுமின்றி, ‘பூஸ்டர்’ டோசை செலுத்தும் பணியை நேற்று தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு இந்த ‘பூஸ்டர்’ டோஸ் வழங்கப்படுகிறது. ஜனவரி மாதம் முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ‘பூஸ்டர்’ டோஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.