• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அருள்மிகு இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா..,

ByKalamegam Viswanathan

Jul 14, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் அருள்மிகு இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை செவ்வாய் சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று இளங்காளி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது முள்ளி பள்ளம் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பூ தட்டுகளுடன் ஊர்வலமாக வந்தனர். வான வேடிக்கை நையாண்டி மேளத்துடன் கிராம முக்கியஸ்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் இளங்காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பூக்களால் அபிஷேகம் நடைபெற்றது. பூச்சொரிதல் விழாவானது அருண்பிரசாத் கணக்குப்பிள்ளை குடும்பத்தார்கள் சார்பாக நடைபெற்றது.

இதில் கிராமத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இன்று காலை பால்குடம் எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். மாலை அக்னி சட்டி எடுத்தல் நிகழ்வு மற்றும் இரவு முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலமும் நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காடுபட்டி காவல்துறையினர் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முள்ளிபள்ளம் ஊராட்சி நிர்வாகமும் செய்துள்ளனர்.