• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

ஆபாச படம் பார்த்ததாக மிரட்டி வியாபாரிகளிடம் பணம் மோசடி – 2 பேர் கைது !!!

BySeenu

Jul 14, 2026

கோவையில் வசிக்கும் வட மாநில வியாபாரிகளின் செல்போன் எண்ணை அறிந்து கொண்டு போலீசில் இருந்து அழைப்பதாக கூறி ஒரு கும்பல் அந்த கும்பல் நீங்கள் ஆன்லைனில் ஆபாச படம் பார்த்து உள்ளீர்கள் உங்களை கைது செய்து சிறையில் அடைத்து புகைப்படத்துடன் நகரம் முழுவதும் வெளியிடுவோம் அதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் நாங்கள் கூறும் எண்ணிற்கு உடனே ஆன்லைனில் பணம் அனுப்ப வேண்டும் என்றும் கூறி மிரட்டுகின்றனர்.

இதனால் அச்சம் அடைந்த வியாபாரிகள் பலரும் அவர்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புகின்றனர்.

இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்கள் வந்தன. அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் வடவள்ளி பி என் புதூர் பகுதியைச் சேர்ந்த பின்னி, சரவணம்பட்டியைச் சேர்ந்த கிஷோர் குமார் ஆகியோர் வடமாநில வியாபாரிகளை மிரட்டி ஆன்லைன் மூலம் பணம் பெற்றது தெரிய வந்தது. உடனே அந்த இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதில் கிஷோர் குமார் மீது கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் உள்ளன. இது தொடர்பான பின்னணியில் கூட்டாளிகள் சேலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூபாய் 15 லட்சம் மோசடி செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.