• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மேம்பாலத்தில் தொங்கிக் கொண்டு இருந்த இளைஞரை பாதுகாப்பாக மீட்ட பொதுமக்கள்..,

BySeenu

Jul 14, 2026

கோவை ராமநாதபுரம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் தனது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பாலத்தில் மேல் திடீரென தொங்க தொடங்கினார்.சுமார் 100 அடி உயரத்தில் இளைஞர் தொங்கிக்கொண்டு இருப்பதை, பாலத்தின் கீழி இருந்து பார்த்த பொதுமக்கள் பதறினர்.

பாலத்தின் கீழ் இருந்த மக்கள் சத்தம் எழுப்பிய நிலையில், பாலத்தின் மேல் இருசக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்கள் , பாலத்தின் மேல் தொங்கிக் கொண்டு இருந்த இளைஞரை மீட்டனர். இளைஞர் குடிபோதையில் தொங்கினாரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. பாலத்தின் மீது தொங்கிய இளைஞர் மீட்கப்பட்டதால் பாலத்தின் கீழ் இருந்த பொது மக்கள் நிம்மதி அடைந்தனர்.

பாலத்தில் தொங்கிய இளைஞர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.