தேனி நாடாளுமன்ற உறுப்பினர், கழக மக்களவை தலைவர், புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ரவீந்திரநாத் இன்று (07.05.2022) காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியகுளத்தில் உள்ள தனது தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் தேனி மாவட்ட கழக இணை செயலாளர் மஞ்சுளா முருகன், போடியக்கனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வகணபதி, போடியக்கனூர் மத்திய ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், போடியக்கனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டித்துரை, போடியக்கனூர் தெற்கு நகர செயலாளர் பழனிராஜ், சின்னமன்னூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியராஜ் ,சின்னமன்னூர் மேற்கு ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன், தேனி மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துபாலாஜி, பெரியகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்லமுத்து ,பெரியகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சேகர், அல்லிநகரம் நகர செயலாளர் ரெங்கநாதன், கம்பம் ஒன்றிய செயலாளர்கணேசன் , ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, கோவை மண்டல இணை செயலாளர் ராஜகோபால், பெரியகுளம் நகர்மன்ற அ.இ.அ.தி.மு.க தலைவர் ஓ.சண்முகசுந்தரம் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூர் கழக நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





