• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தி.மு.க அரசு ராஜினாமா செய்ய வேண்டும் –பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பேட்டி

ByA.Tamilselvan

May 8, 2022

தமிழக அரசால் மின்சாரம் கொடுக்க முடியவில்லையென்றால் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். -மதுரை விமான நிலையத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பேட்டி
மதுரையில் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பெங்களூரில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவிக்கு மதுரை விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சி.டி.ரவி கூறுகையில்.
திமுக ஆட்சி ஓராண்டு நிறைவடைந்தது குறித்த கேள்விக்கு.?
இந்த ஒரு ஆண்டில் திமுக என்ன செய்தார்கள் என மக்களிடம் தான் கேட்க வேண்டும். திமுக மக்களுக்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றவில்லை.
நிலக்கரி விவகாரம் குறித்த கேள்விக்கு.?
இதை தான் அவர்கள் எப்போதும் செய்கிறார்கள் திமுக ஆட்சியில் உள்ளது இதற்கு அவர்கள் தான் பொறுப்பு. அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லையா. எதற்கெடுத்தாலும் அவர்கள் மத்திய அரசைதான் குற்றம் சாட்டுகிறார்கள். தமிழகத்தை ஆள்வது மோடி அல்ல முதல்வர் ஸ்டாலின் தான். இந்த மாநில அரசால் மின்சாரம் கொடுக்க முடியவில்லையென்றால் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். அதற்குப் பின் நாங்கள் மின்சாரம் அளிப்போம் என்றார்.